புதன், 26 டிசம்பர், 2012

நட்பூக்கள்


உதிர்ந்த மலர்கள்
கிளைக்குத் திரும்புகிறது
ஓ! நட்பூக்கள்

சனி, 15 டிசம்பர், 2012

டிசம்பர் 14 கலாச்சாரம்


ஆடம் லன்சா தந்த கிறிஸ்மஸ் பரிசு
ஒபாமா அழுகை அமெரிக்கா தொழுகை
ஆய்தக்  கொலைச் சாரம்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

புதன், 21 நவம்பர், 2012

மௌனம் பேசினால்...


எத்தனை மேகங்கள் நம் வாழ்வில்?
எத்தனை மோகங்கள் நாம் வாழ்வில்
நீர் வட்ட அதிர்வலைகள்....

வியாழன், 15 நவம்பர், 2012

கோடுகள் கேடுகள்


இந்த மண் ஒன்றுதான்
விண் ஒன்றுதான்
மனித குலம் என்றுதான்?

சனி, 10 நவம்பர், 2012

மறுப்பு


மறக்க முடியாத பெயர்கள்
உரக்கச் சொல்ல முடியாது
ஆதி அந்தம் வரை

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இது வேறு கூட்டல்


இரண்டும்  ஒன்றாவதில்லை
ஒன்றுடன்  ஒன்று  சேர்வதுமில்லை
இரண்டு  மூன்றானது!

செவ்வாய், 2 அக்டோபர், 2012

எத்தனையோ முறை


உனக்கு அடைக்கலம் தந்திருக்கிறேன்
தாயின் வயிற்றில் எட்டி உதைத்து சென்ற
மகனாக நீ!

பார்த்திருக்கிறேன்


இருளில் ஒளியில் மழையில்
குளிரில் வெயிலில்
நீ எங்கே?

விழிகாட்டி


இருக்கும்வரை வாழ்க்கை
இல்லாதபோதும் நீ வாழ்ந்தால்
நீ வழிகாட்டி

சனி, 29 செப்டம்பர், 2012

இதயமே இதயமே:


நேற்று துடித்தது
இன்று துடிக்கிறது
நாளை துடிக்குமா? இதயம்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அலையே:


மலை முடி மேல் ஏறி
அமரவும் தயார்தான்
பசிக்காமல் இருந்தால்.

சனி, 15 செப்டம்பர், 2012

ஆனாலும்...


தொலைந்து போனவர்களைத் தேடுவதும்
இழந்து போன காதலைத் தேடுவதும்
கால விரயம்.

சனி, 8 செப்டம்பர், 2012

குறை குடம் கூத்தாட


குறை ஒன்றும் இல்லா மறை மூர்த்தி கண்ணா!
குறை இல்லாதது ஏதும் இல்லை
சோனியா இணையம் உட்பட...

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சொல்லாமலே


எறும்புக்குத் தெரியும் இனிப்பின் இடம்
எனக்கும் தெரியும் நீ இருக்கும் இடம்
காதல்

காதல்


நான் என்பது  அழிந்து போனது
நீ என்பது நுழைந்து கொண்டது
காதல் காதில் தில்!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தேசியப் பறவை


மயில் அழகாக இருக்கிறது சுதந்திர தினத்தில்
தோகை விரிக்கிறது கண் கொள்ளாக் காட்சி(கட்சி)
கறிக்கு ஆகாது.

புதன், 1 ஆகஸ்ட், 2012

எப்படி தெரிந்து கொள்வது?/எப்படி தெரிந்து கொல்வது?


வந்திருப்பது இராமனா? இராவணனா?
பத்து தலை இல்லையே; பற்றுதலும் இல்லையே!
சந்தேகமா? தியாகமா? வேஷமா?

செவ்வாய், 17 ஜூலை, 2012

வாய் வழி வாழ்த்து


வாள் வாய்; வாழ்வாய் தோல்வாய்;
வீழ்வாய் கால்வாய்; ஆழ்வாய்.
சீ!

செவ்வாய், 10 ஜூலை, 2012

விஸ்வ பாரதி


இரு நாட்டு தேசிய கீதம்
இயற்றிய மகா கவிப் பள்ளியில்
மூத்திர வேதம்.

வியாழன், 28 ஜூன், 2012

இந்தியக் குடியரசு


குடியரசுத் தேர்தல் ஒரு வழிப்பாதை
இந்தியக் குடிமகன்களுக்கு பங்கின்றி
ஜனநாயகம்.?

திங்கள், 4 ஜூன், 2012

நன்றி பாராட்டு: வாள் வாய்.


தோள் தந்தேன் ஏறிச் சென்றார்கள்
வாள் தந்தேன் வெட்டிக் கொன்றார்கள்
நீ யாரென்று?

சனி, 26 மே, 2012

பூரானா பூ மனமா?/ பூ மனப் பூரான்கள்


தடம் பதியா(த) சாலைகளில்
நினைவூறல்களுடன் மணம் பரவும்
இளமனது முதுவயது

பயம்


நாயும் பூனையும் நண்பர்களாக
மனிதர்கள் எல்லாம் துன்பங்களாக
ஊரும் பாம்பும் ப(ல்)லியும்.

சனி, 19 மே, 2012

எல்லைக் கோடு (கேடு)


சமமாய் முகம் பார்க்காமல்
குறியாய் பார்க்கிறார்கள்
பெண்களை.

வியாழன், 3 மே, 2012

சேர்க்கை


தேனீ எண்ணம் தியானம்
ஈயின் வண்ணம் காமம்
மீட்சியும் கவர்ச்சியும்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

(அ)சைவம்


இராமலிங்க வள்ளல் சொல்லும்
ஆடு கோழி மாடுகள் மெல்லும்
மனிதமும் மிருகமும்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

இதயமே எதையுமே:


கவிதைகளுக்காக வார்த்தைகளைத் தேடினேன்;
மௌனம் கலைந்தது; சாந்தியும் தொலைந்தது.
கட்டாயப்படுத்தாதீர்

புதன், 4 ஏப்ரல், 2012

குடிக்காத குரங்கு


மனைவியும் மகனும் இருக்க
மேலும் ஒரு உறவு கேட்கிறது
கண்ணதாச மனம்.

திங்கள், 26 மார்ச், 2012

205 கோடி சாதனை


பிரதீபா பாடீலின் உலகச் சுற்றுலாச் சாதனையும்
இந்திய மக்களின் வேதனையும் சோதனையும்
கட்டுச் சோற்றில் எலிக் குஞ்சு.

புதன், 7 மார்ச், 2012

நான் அழியாச் சி(ன்)னம்


நான் அமைதியாகிவிட்ட ஆழ்கடல்
வெளித் தெரியாது ஏராளமான உயிரனங்கள் வாழ,
நீ (யாரும்) அறியாச் சலனம்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

வலை அதிர்வுகள் தீண்டாத பொழுதுகளில்...


மோக மேகங்கள் கலைய, பெருமழை பொழிய
கண்(மாய்)ஏரிகள் நிரம்ப, குளங்கள் பெருகி வழிய
கண்ணுறவில், பெண்ணரவு; பெண்ணுருவில்!.

புதன், 15 பிப்ரவரி, 2012

ஊசலாட்டம்


இப்படி நினைக்கையில் அப்படியும்
அப்படி நினைக்கையில் இப்படியும்
வாழ்வின் சில நேரங்களில்!

திங்கள், 6 பிப்ரவரி, 2012

விடு முறை(யை)


ஞாயிற்றுக் கிழமை ஆடுகளின் ஓலம்
விடியற்காலை உயிர்போக
இறுதியும் முதலும்!

வியாழன், 26 ஜனவரி, 2012

ரோஜாவும் அர்ச்சனையும்


எப்போதாவது தெரியும்  வானவில்
காட்சிக்கு ஏங்கித் தவிக்கும் மனசு
மீட்சியும் சேர்க்கையுமின்றி!

புதன், 18 ஜனவரி, 2012

ஆன்லைன் சகவாசம்:


நம்பவும் முடியவில்லை;
நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
 வாசம் வீசும் வேஷம்? இரயில் சினேகம்?

செவ்வாய், 3 ஜனவரி, 2012

பண வேட்டையும் பிண வேட்கையும்:


தன்னை விற்க வந்திருந்தாள்;
தன்னை விற்க வந்திருந்தான்.
பரிமாறிக் கொண்டனர் இரணத்தை!